‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால்.
அதன் பிறகு ‘மைனா’ படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். 2014-ம் ஆண்டு இயக்குநர் விஜய்யைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். விவாகரத்திற்குப் பிறகு அமலா பால் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

அவர் நடித்த ‘ஆடை’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. தற்போது மலையாளத்தில் பிருத்விராஜுடன் ‘ஆடு ஜீவிதம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்று தனது 32 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் அமலா பால். இந்நிலையில் அமலா பாலுக்கு அவரது நண்பர் ஜகத் தேசாய் புரபோஸ் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு அமலா பாலும் சம்மதம் தெரிவித்துவிட இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகத் தெரிகிறது.
ஜகத் தேசாய் வெளியிட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதிவில், “என் ஜிப்சி ராணி ஓகே சொல்லிவிட்டார். #Weddingbells. பிறந்த நாள் வாழ்த்துகள் என் அன்பே” என்று பதிவிட்டிருக்கிறார். கூடவே அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார். இந்த ஜோடிக்குப் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.