லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நுழைந்தார். நடிகையாக வலம் வந்த நயன் `9 Skin’ என்ற சரும பராமரிப்பு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி தொழில்முனைவோராக களம் இறங்கினார்.

`ஆறு வருட முயற்சியும், அன்பும் தான் இந்த ப்ராடெக்ட்… இதனை உங்களைப் போலவே தனித்துவமாக உருவாக்கியுள்ளோம். சுய அன்பு தான் அழகின் ரகசியம் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று சருமத்திற்கான கிரீம், சீரம், பூஸ்டர் ஆயில் போன்ற தயாரிப்புகளை வெளியிட்டார்.
இதற்கென `9skinofficial’ என்ற அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தையும் தொடங்கி இருக்கிறார். இந்த தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது `Femi 9′ என்ற நாப்கின் தயாரிப்பை ஆயுத பூஜை அன்று அறிமுகப்படுத்தி உள்ளார்.
இது குறித்து இன்ஸ்டா பதிவில், “இந்த விஜயதசமி திருநாளில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதில் எங்கள் மனம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது.
அதீத கடமை உணர்வுடனும், அக்கறையுடனும் Femi9-ஐ அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். தனிமனித சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இவை தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த Femi9 பிராண்ட் மட்டுமல்ல, இது ஒவ்வொரு பெண்ணின் வலிமை மற்றும் அழகுக்கான ஒரு அடையாளமாகும்.
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த முயற்சியைக் கொண்டாட எங்களுடன் இணையுங்கள்! ஒருவரையொருவர் ஆதரிப்போம். இணைந்து உயர்வோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.
அதோடு Femi 9-ன் இணை நிறுவனர்களான கோமதி, விக்னேஷ் சிவன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

நயன்தாராவின் 9Skin சரும தயாரிப்புகளும், பெண்களுக்கான Femi9 நாப்கின் தயாரிப்பும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது.
முதல் மூலதன வருவாயைத் தாண்டி இரண்டாவது வருவாயைப் பெறுவது நம்முடைய வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அந்தவகையில் நடிப்பைத் தாண்டி தன்னையே ஒரு பிராண்டாக அறிமுகப்படுத்தித் தயாரிப்புகளை வழங்கி வருகிறார், நயன்.
வாழ்த்துகள் நயன்!