அக்.29 ல் சந்திர கிரகணம்: திருப்பதி கோயில் மூடல்| Lunar eclipse on Oct 29: Tirupati temple closure

திருமலை: அக்.29-ம் தேதி அதிகாலை 1.05 முதல் 2.22 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

சந்திர கிரகணம் நிகழ்வையொட்டி அக் 28-ம் தேதி இரவு 7.05 முதல் 29-ம் தேதி அதிகாலை 3.15 மணி வரை 8 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

29-ம் தேதி அதிகாலை சுப்ரபாத சேவை ஏகாந்தமாக நடைபெறும். சந்திர கிரகணத்தால் 28-ம் தேதி சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் அன்றைய மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.