சென்னை இன்று சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பதால் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கத்தில் நடக்கும் 26-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. இதையொட்டி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இன்று பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. […]
