
இவர் ரஜினிகாந்த் அல்ல.. கேரளாவை கலக்கும் டீக்கடை ஓனர்
பெரும்பாலும் பிரபல நட்சத்திரங்களின் சாயல் கொண்ட இளைஞர்கள் அவர்களைப் போலவே ஸ்டைலாக உடை அணிவது அவர்களைப் போலவே தோற்றத்தையும் மாற்றிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் புகைப்படங்கள் ரிலீஸ் வீடியோக்கள் என வெளியிட்டு தங்களை பிரபலப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பெரும்பாலும் ரஜினி, கமல் போன்றவர்களுக்கு அவர்களது இளமைக்கால தோற்றத்தில் தான் பலரும் தங்களது உருவத்தை ஸ்டைலாக மாற்றிக் கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம்.
ஆனால் 72 வயதில் ரஜினிகாந்த் தற்போது இருக்கும் தோற்றத்தில், கேரளாவில் கொச்சியை சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் சுதாகர் பிரபு என்பவர் கிட்டத்தட்ட ரஜினியின் சாயலிலேயே பார்ப்பதற்கு ஆச்சரியம் தருகிறார். தினசரி இந்த பக்கம் வரும் இளைஞர்கள் பலரும் அவருடன் ஆர்வமாக புகைப்படம் செல்பி எடுத்துக்கொண்டு சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகின்றனர். இது குறித்த வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.