வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: முன்னாள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்,59 டி.வி. செய்தி சேனலில் பணியாற்றப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன், 2019-2022 ஆண்டுகளில் பிரதமராக இருந்தார்.
இந்நிலையில் பிரிட்டனில் முன்னணி செய்தி சேனலான ஜி.பி. நியூஸ் சேனலில் அரசியல் நிகழ்வுகள் குறித்த விமர்சகர், நெறியாளராக பணியாற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக போரிஸ் ஜான்சன் தனது எக்ஸ் தளத்தில் கூறியது, 2024 ஆண்டு முதல் ஜி.பி.,சானல் வாயிலாக ரஷ்ய- உக்ரைன் போர், நடைபெற உள்ள பிரிட்டன் பொதுத்தேர்தல், அமெரிக்க அதிபர் தேர்தல் ஆகிய நிகழ்வுகள் என அனைத்தையும் பற்றிய எனது பார்வைகளை நான் இந்த புதிய சேனலுக்கு வழங்கப் போகிறேன்” என்றார்.
போரிஸ் ஜான்சன் அரசியலில் ஈடுபடுவதற்கு முன் பத்திரிகை துறைகளில் பணியாற்றியவர் தான் என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement