வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சித்ரகோட்: மத்திய பிரதேச மாநிலம் சென்றிருந்த பிரதமர் மோடி துளசி பீடாதிபதி ஜெகத்குரு ராமனாந்தாச்சார்யாவை சந்தித்து ஆசி பெற்றார்.
மத்திய பிரதேச மாநிலத்திற்கு நவ. 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.தேர்தல் பிரசாரம் செய்து வரும் பிரதமர் மோடி இன்று சித்ரகோட் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற துளசி பீடாதிபதி ஜெகத்குரு ராமனாந்தாச்சார்யாவை சந்தித்தார். மோடியை வரவேற்ற ராமனாந்தாச்சார்யா ஆரத்தழுவி ஆசீர்வதித்து வரவேற்றார்.
அப்போது ராமர்கோயில் கட்டுவதற்காக தாங்கள் எடுத்த முயற்சியில் தங்களின் பங்களிப்பை நினைவு கூர்ந்து பாராட்டிய பிரதமர் மோடி, வரும் ஜன.22-ல் நடக்க உள்ள கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு துளசி பீடாதிபதியை கேட்டுக்கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement