சென்னை: சிவகார்த்திகேயன் மற்றும் இமான் விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில், பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள அயலான் படம் என்ன ஆகும் என்ற பதற்றத்தில் படக்குழு இருக்கிறது. இசையமைப்பாளர் இமான் பேட்டி ஒன்றில், சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் சேர்ந்து பயணிக்க மாட்டேன். அவர் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது.
