Jio Recharge Plans: ஜியோ நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல ரீசார்ஜ் திட்டங்களின் விருப்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் பல மலிவான மற்றும் விலையுயர்ந்த ரீசார்ஜ் திட்டங்களையும் வழங்குகிறது. உங்களுக்கு தேவையான வகையில், குரல் அழைப்பு, அதிக நாட்கள் வேலிடிட்டி வேண்டுமா? அல்லது டேட்டா அதிகமாக வேண்டுமா? ஆண்டு தோறும் ஒரே ஒருமுறை ரீசார்ஜ் செய்ய வேண்டுமா? இப்படி பல்வேறு வகைகளில் ஜியோ நிறுவனம் தனது ரீசார்ஜ் திட்டங்களை பட்டியலிட்டு உள்ளது. இதில் குறைந்த விலையில் அதிக நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டத்தை பற்றி பார்போம். அதனுடன் மேலும் சில ஜியோ ரீசார்ஜ் திட்டங்களை குறித்தும் அறிந்துக்கொள்ளுவோம்.
குரல் அழைப்பு முதன்மையாக கொண்ட பயனர்களுக்கான திட்டம்
இந்த பட்டியலில் 11 மாதங்கள், 84 நாட்கள் மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி விவரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், எந்த திட்டம் உங்களுக்கு தேவைப்படும் என்பது பயனர்களின் தேவைகளைப் பொறுத்தது. இந்தத் திட்டங்களின் விலை மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
ரூ.155 திட்டத்தின் விவரம்
ஜியோவின் இந்த திட்டத்தில், பயனர்கள் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் கால்த்தை பெருவார்கள். குரல் ஆழைப்பு மட்டுமே விரும்புவோருக்கு இந்த திட்டம் ஒரு நல்ல வழி. இதில், பயனர்கள் 2ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளைப் பெறுகிறார்கள். இது மட்டுமின்றி, இந்த ரீசார்ஜ் மூலம் நீங்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகலையும் பெறுவீர்கள்.
ஜியோவின் ரூ.395 திட்டத்தின் விவரம்
ஜியோவின் இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில், பயனர்கள் மொத்தம் 6 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இதிலும் நீங்கள் வரம்பற்ற அழைப்பு மற்றும் 1000 எஸ்எம்எஸ் நன்மைகளைப் பெறுவீர்கள். இந்த திட்டம் வரம்பற்ற 5ஜி தகுதியுடன் வருகிறது. இதில் நீங்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகலைப் பெறுவீர்கள்.
336 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம்
அதிக நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டம் ரூ.1559 ஆகும். இது 336 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில், பயனர்கள் மொத்தம் 24 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். பயனர்கள் வரம்பற்ற அழைப்புகளுடன் 3600 எஸ்எம்எஸ்களையும் பெறுவார்கள். இதிலும் நீங்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் பாராட்டு சந்தாவைப் பெறுவீர்கள்.
இந்த திட்டம் வரம்பற்ற 5ஜி டேட்டா சலுகையுடன் வருகிறது. இந்த மூன்று திட்டங்களும் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் அனுப்புவது முதன்மையாகக் கொண்ட பயனர்களுக்கானது. நீங்கள் அதிக டேட்டா உபயோகிப்பவராக இருந்தால், இந்தத் திட்டங்கள் உங்களுக்கானவை அல்ல. ஜியோவின் ரீசார்ஜ் போர்ட்ஃபோலியோவின் பிற பிரிவுகளை நீங்கள் ஆராயலாம்.