சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக கடந்த 5 ஆண்டுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ். தமிழில் உருவாகி ரசிகர்களை கவர்ந்த இந்தத் தொடர், தொடர்ந்து மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இன்றுடன் இந்த தொடர் நிறைவடைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் அக்டோபரில் துவங்கப்பட்ட இந்தத் தொடர் தற்போது அக்டோபரிலேயே நிறைவடைந்துள்ளது.
