
திருமணநாளை கொண்டாடிய வைஷாலி தணிகா
சின்னத்திரை நடிகை வைஷாலி தணிகா, ராஜா ராணி சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அதன்பின் பல பிரபலமான சீரியல்களில் நடித்துள்ள அவர், சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். சத்ய தேவ் என்பவரை வைஷாலி தணிகா கடந்த அக்டோபர் 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தனது கணவருடன் வைஷாலி திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து வைஷாலி – சத்ய தேவ் தம்பதியினருக்கு திருமணநாள் வாழ்த்துகள் ரசிகர்களிடமிருந்து குவிந்து வருகிறது.