வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கேரளாவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
கிறிஸ்தவ கூட்ட அரங்கில் நடந்த சம்பவம் தொடர்பாக கேட்டறிந்த அமித்ஷா, அங்கு நிலவும் சூழல் குறித்தும் அறிந்து கொண்டார். சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் மாநில அரசிற்கு உதவும் வகையில் என்ஐஏ மற்றும் என்எஸ்ஜி அதிகாரிகள் குழுவினர் உடனடியாக டில்லியில் இருந்து கேரளா செல்லவும் உத்தரவிட்டு உள்ளார்.

மாநில அரசின் அறிக்கைக்கு பிறகே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உஷார்
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் போலீஸ் அதிகாரிகளை, மாநில டிஜிபி உஷார்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகள் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்.ஐ.ஏ., விசாரணை
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். கேரளாவில் உள்ள என்.ஐ.ஏ., பிரிவு அதிகாரிகளும், சம்பவ இடத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
கதறல்
அடுத்தடுத்து மூன்று முறை பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் பலியானார். பெண்கள், குழந்தைகள் பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் பலர் உயிருக்கு போராடுகின்றனர் என இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
டாக்டர்கள் விடுமுறை ரத்து

கிறிஸ்தவ கூட்ட அரங்கில் மர்ம பொருள் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து, கொச்சி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் விடுமுறையில் உள்ள டாக்டர்கள் உடனடியாக கலமசேரி மற்றும் எர்ணாகுளம் மருத்துவமனைகளுக்கு வர வேண்டும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement