வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: இந்திய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ‛டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்தியாவில் உலக கோப்பை தொடரின் 13வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. லக்னோவில் இன்று (அக்.,29) நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ‛டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணியிலும் மாற்றம் செய்யப்படவில்லை.
இப்போட்டியில் வெற்றிப்பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணியும், இப்போட்டியில் தோற்றால் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிடும் சூழலில் இங்கிலாந்து அணியும் களமிறங்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணி விபரம்:
ரோகித் சர்மா, சுப்மன் கில், விராத் கோஹ்லி, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ், சூர்யகுமார், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement