வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: அமெரிக்க புகழ்பெற்ற நடிகர் மாத்யூபெர்ரி 54 மர்மமான முறையில் அவரது இல்லத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் ‘ பிரண்ட்ஸ்’ என்ற டிவி தொடர் பிரபலமானது. இதில் சாண்ட்லர் என்ற பாத்திரத்தில் நடித்து வந்தவர் மாத்யூ. 1994 முதல் 2004 வரையிலான இந்த டிவி தொடரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். சமீப காலமாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் போதை பழக்கத்திற்கு ஆளானார்.
இந்நிலையில் வீட்டில் மர்ம முறையில் இறந்து கிடந்தார். இவர் அளவுக்கு அதிகமாக போதை பயன்படுத்தியதால் இவர் மரணம் அடைந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இவரது மறைவால் ரசிகர்கள் பலர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement