எர்ணாகுளம்: ‛‛ கேரளா, களமச்சேரி குண்டுவெடிப்புக்கு நான் தான் காரணம் ”- போலீசில் சரணடைந்த டோமினிக் மார்ட்டின் முன்கூட்டியே பதிவு செய்த வீடியோ வெளியானது. சபை நடவடிக்கை பிடிக்காத காரணத்தினால் வெடிகுண்டு வைத்ததாக கூறியுள்ளார். இவர் தான் குற்றவாளி என்பதை போலீசாரும் உறுதி செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் கொச்சி களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் கிறிஸ்தவ அமைப்பான யெகோவா சாட்சிகள் சபையின் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் பிரார்த்தனை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, மூன்று முறை வெடிகுண்டு வெடித்தது. அதில் ஒருவர் பலியான நிலையில் 56 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக டோமினிக் மார்ட்டின் என்பவர் போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், டோமினிக் மார்ட்டின் , போலீசில் சரண் அடைவதற்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அதில், கேரளா, களமச்சேரி குண்டுவெடிப்புக்கு நான் தான் காரணம்.சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் கடந்த, 4 ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்கு செல்வதில்லை எனக்கூறியுள்ளார்.
இவர் யெகோவா சபையின் உறுப்பினராக இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும், இந்த குண்டுவெடிப்புக்கு, டோமினிக் மார்ட்டின் தான் காரணம் என்பதை போலீசாரும் உறுதி செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement