ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள `ஜப்பான்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இதன் இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் கார்த்தியின் படங்களை இயக்கிய இயக்குநர்கள் மற்றும் அவருடன் சேர்ந்து நடித்த, பணியாற்றிய பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழா மேடையில் பேசிய நடிகர் சத்யராஜ், “நான் சினிமால நடிக்கிறதுக்குக் கோவைல இருந்து ஓடி வந்தேன். அப்போ எனக்கு நம்பிக்கையாக இருந்தது சிவக்குமார் அண்ணன்தான். அப்போ தான் கார்த்தி பிறந்தார். சின்ன வயசுல கார்த்தி, சூர்யாவைப் பக்கத்துல உள்ள கடைக்குக் கூட்டிட்டு போய் ஆரஞ்சு மிட்டாய் வாங்கிகுடுப்பேன். எம்.ஜி. ஆர் நடிக்க வந்து பல தொழில்நுட்ப வேலைகள் கத்துகிட்டாரு. கார்த்தி பல தொழில்நுட்ப வேலைகள் கத்துக்கிட்டு நடிக்க வந்தார்.

நான் பெருமையாக நினைச்சு நடிச்ச கதாபாத்திரம் பெரியாரோட கதாபாத்திரம்தான். எம். ஜி. ஆர் ஆசைப்பட்டு நடிக்க நினைத்த கதாபாத்திரம் வந்தியத்தேவனுடைய கதாபாத்திரம். அதில் கார்த்தி நடித்திருக்கிறார். எம். ஜி. ஆர் உயிரோட இருந்திருந்தால் வந்தியத்தேவனாக நடித்த கார்த்திக்குப் பல பரிசுகளைக் கொடுத்திருப்பார். ராஜு முருகன் ஒரு நல்ல முற்போக்கு சிந்தனையாளர். படத்தை கமெர்சியலாக எடுத்தாலும் அதுல சில சமூக கருத்துக்களை வச்சிருக்காருன்னு கார்த்தி சொன்னார்” என்றார்
இதையடுத்துப் பேசிய தமன்னா, “கார்த்தியினால்தான் நான் தமிழ் கற்றுக்கொண்டேன். நான் இருவரும் சினிமாவின் மாணவர்கள். அனைவரையும் என்டர்டைன் செய்வதற்குப் புதுபுது கதாபாத்திரங்களை செய்து வருகிறார்” என்று கூறிய பிறகு கார்த்தியுடன் சேர்ந்து ‘அடடா மழைடா…’ பாடலுக்கு நடனமாடினார்.
“கார்த்தியை நான்தான் முதலில் பாட வைத்தேன்” என்று கூறிய யுவன் சங்கர் ராஜா, கார்த்தியுடன் சேர்ந்து பாடலைப் பாடி மகிழ்ந்தனர்.

இதையடுத்துப் பேசிய நடிகர் ஆர்யா, “கார்த்தியின் 25வது படத்திற்கு எடுத்துக்கொண்ட காலம் அதிகம். ஆனால், வெற்றி சதவிகிதம் அதிகமாகவே வைத்திருக்கிறார்.” என்றார்.
இதுதவிர ஜெயம் ரவி, விஷால், இயக்குநர் பி.எஸ்.மித்ரன், திலீப் சுப்புராயன் உள்ளிட்ட பலரும் கார்த்து குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தனர்.