Netanyahu Says Existential Test For Israel, Hamas Demands Prisoner Swap | 23வது நாளாக தொடரும் மோதல்; போர் நீண்ட நாட்கள் நடைபெறும்; இஸ்ரேல் பிரதமர் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜெருசலேம்: இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 23வது நாளாக மோதல் தொடர்ந்து வருகிறது. காசாவிற்கு மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டது என பாலஸ்தீனம் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருப்பதாவது: ஹமாஸூடனான போர் மிக நீண்ட நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது. தரைப்படை தாக்குதலை 2வது கட்ட முற்றுகையாக பார்க்க வேண்டும்.

229 பேரை பிணையக் கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்துள்ளனர். காசாவிற்கு இணைய சேவைகள் வழங்கும் நடவடிக்கையை முடக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

மீண்டும் இணைய சேவை

காசாவிற்கு மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டது. விமானப்படை தாக்குதலில் சேதமடைந்த தொலைத் தொடர்பு கேபிள்கள் சரி செய்யப்பட்டன என பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது/.

இம்ரான்கான் கண்டனம்

பாலஸ்தீனர்கள் இனப்படுகொலை செய்யும் முயற்சிகளில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. அதிகாரம் படைத்தவர்களும் இந்த இனப்படுகொலையை அனுமதித்து வருவது கண்டனத்திற்குரியது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.