'எனது இதய துடிப்பு நின்றால்…' – மராத்தா இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் எச்சரிக்கை

மகாராஷ்டிரா அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் மராத்தா இன மக்களுக்கு தற்போது தனிப்பட்ட இட ஒதுக்கீடு எதுவும் இல்லை. தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரி கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2018-ம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து மாநில அரசு மராத்தா சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்கியது. ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து மராத்தா போராட்டங்களை முன்னின்று நடத்திய மனோஜ் ஜராங்கே போராட்டங்களை நடத்தி வருகிறார். இரண்டு மாதத்திற்கு முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். மாநில அரசு தலையிட்டு போராட்டத்தை முடித்து வைத்தது.

இதையடுத்து மராத்தா இட ஒதுக்கீட்டு பிரச்னைக்கு தீர்வு காண மனோஜ் மாநில அரசுக்கு 40 நாள்கள் காலக்கெடு விதித்தார். ஆனால் அந்தக்காலக்கெடு முடிந்த பிறகும் மாநில அரசு இவ்விவகாரத்தில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மனோஜ் மீண்டும் தனது கிராமத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த புதன் கிழமையில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வரும் மனோஜ் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

அவர் நேற்று அளித்த பேட்டியில், ”இன்று அல்லது நாளைவரை என்னால் பேச முடியும். என்னுடன் பேச அரசிடமிருந்து யாரும் வரவில்லை. என்னால் பேச முடியாமல் போன பிறகு அரசு சார்பாக பேச வந்தால் எந்த வித பயனும் கிடையாது. எனது இதய துடிப்பு நின்றால் மாநில அரசின் இதயத்துடிப்பும் நின்றுவிடும். மூன்றாவது கட்ட போராட்ட அறிவிப்பு குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். மராத்தா இன மக்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மராத்தா போராட்டத்திற்கு ஆதரவாக சிவசேனா எம்.பி.ஹேமந்த் பாட்டீல் தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். ஹின்கோலி என்ற இடத்தில் அவரது கார் சென்ற போது மராத்தா ஆர்வலர்கள் அவரது காரை தடுத்து நிறுத்தினர். உடனே அவர் தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். லாத்தூர் பா.ஜ.க எம்.பி. சுதாகர் இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில் மராத்தா சமுதாய மக்களுக்கு சட்டப்பூர்வ இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

உண்ணாவிரத மேடையில் மனோஜ்

பா.ஜ.க. மாநில தலைவர் சந்திரகாந்த் பவன்குலே மும்பை அருகில் உள்ள கல்யான் மற்றும் டோம்பிவலியில் பொதுக்கூட்டம் நடத்திய போது கருப்புக்கொடி காட்டி மராத்தா ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். இது தவிர மாநிலம் முழுவதும் அரசியல்வாதிகளுக்கு எதிராக மராத்தா சமுதாயத்தினர் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். மராத்தா சமுதாயத்திற்கு ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யாமல் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இந்த இடஒதுக்கீடு விவகாரம் தான் தற்போது மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.