திருவனந்தபுரம்: கேரள மாநிலம் களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து, இன்று அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்திற்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் களமச்சேரி என்ற இடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜெபக்கூட்டம் நடைபெற்றிருக்கும்போது அடுத்தடுத்து மூன்று வெடிகுண்டுகள் வெடித்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த அந்த இடத்தில் நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம் காரணமாக 36 பேர் படுகாயம் […]
