கேர்ள் பிரண்ட் வாட்ஸ்அப்பில் பிளாக் பண்ணிடாங்களா… ஈஸியா கண்டுபிடிக்க 5 வழிகள் இதோ

Whatsapp Tips: வாட்ஸ்அப் செயலி என்பது அனைவரின் அன்றாட வேலைகளில் மிக முக்கிய ஒன்றாக மாறிவிட்டது. உங்கள் குடும்பத்தினர், பணியிடத்தில் உள்ள சக பணியாளர்கள் மற்றும் பலருடன் தொடர்புகொள்வதற்கு வாட்ஸ்அப்பை போல எளிமையான மற்றும் ஏதுவான செயலி வேறெதும் இல்லை.

ஒருவர் மீது கோபம் கொள்வது என்பது மனித இயல்புகளில் ஒன்று. இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில் கோபத்தை வாட்ஸ்அப் மூலமாகவும் வெளிக்காட்டும் செயல்களை நடக்கின்றன எனலாம். யாரிடமாவது கருத்து வேறுபாடோ அல்லது மன கசப்போ ஏற்படும் சூழல் வரும். அந்த வகையில், பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் வாட்ஸ்அப்பில் உங்களை பிளாக் செய்யலாம். அப்படி ஒருவர் பிளாக் செய்துள்ளார் என்பதை எளிதாக ஒருவருக்கு தெரியாது. 

இருப்பினும், நீங்கள் ஒருவரால் பிளாக் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்தால், இந்த சில டிப்ஸ்களை பின்பற்றி அவர் உங்களை பிளாக் செய்துள்ளாரா இல்லையா என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

இந்த டிப்ஸ்களை முயற்சித்து பாருங்க

– Last Seen, Online போன்றவை உங்களுக்கு காட்டாது. இவற்றை நீங்கள் அவரின் சேட் பாக்ஸில் பார்க்கவில்லை என்றால் நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இன்று பலரும் தனியுரிமைக்காக (Privacy), பலர் Last Seen, Online போன்றவற்றை மற்றவர்களுக்கு காட்டாதபடி வைத்திருப்பார்கள். எனவே, இந்த காரணியின் அடிப்படையில் மட்டுமே நீங்கள் உறுதியாக இருக்க முடியாது.

– வாட்ஸ்அப் DP காட்டவில்லை என்றால் அவர் உங்களை பிளாக் செய்திருக்கலாம். ஒருவேளை அவர் புகைப்படம் வைக்கவில்லை என்றாலும் DP காட்டாது. எனவே இதிலும் நீங்கள் முழுமையாக உறுதி செய்ய முடியாது. 

– மெசேஜ் அவரின் மொபைலக்கு சென்றுவிட்டது என்பதை குறிக்கும் வகையில் டபுள் டிக் காட்டும். ஆனால், அவர் உங்களை பிளாக் செய்திருந்தால் சிங்கிள் டிக்தான் காட்டும். அவர் உங்களை பிளாக் செய்திருந்தால் அவருக்கு மெசேஜ் போகாது.  

– வாட்ஸ்அப்பில் அவருக்கு வீடியோ அல்லது ஆடியோ கால்களை செய்தால், அது தோல்வியில் முடிந்தால் நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம். இதன்மூலமே நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்யலாம். 

– வாட்ஸ்அப் மட்டுமின்றி நீங்கள் செயலிக்கு வெளியேவும் அவரை தொடர்புகொள்ள முயற்சித்து, அழைப்பு போகவில்லை என்றால் அவர் வாட்ஸ்அப்பிற்கு வெளியேவும் உங்களை பிளாக் செய்திருக்கிறார் என்று பொருள். 

வாட்ஸ்அப் செயலியில் ஒருவர் பிளாக் செய்திருந்தால், நீங்களும் அவரை பிளாக் செய்துகொள்ளலாம். அவரின் சாட்பாக்ஸில் மேல் வலது புறத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து, அதில் Block ஆப்ஷனை பயன்படுத்தி நீங்களும் அவரை பிளாக் செய்யலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.