
பிக்பாஸ் விக்ரமன் மீது 13 பிரிவுகளில் வழக்கு பதிவு!
லண்டனில் வசித்து வரும் கிருபா முனுசாமி சில தினங்களுக்கு முன் பிக்பாஸ் பிரபலமான விக்ரமன் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி தன்னை காதலிப்பது போல் ஏமாற்றி பண மோசடி செய்ததாக சோஷியல் மீடியாவில் புகார் கூறினார். இதுகுறித்து இருவர் மீதும் விமர்சனங்கள் எழுந்தது. அதிலும், கிருபா ஆதராமில்லாமல் குற்றச்சாட்டு சொன்னதாகவும் ஆதாரமிருந்தால் வழக்கை சந்திக்க தயார் என்றும் விக்ரமன் கூறியிருந்தார்.
இந்நிலையில், கிருபா முனுசாமி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இணையதளம் மூலம் அவர் அளித்துள்ள புகாரின் பெயரில் பாலியல் வன்கொடுமை, பெண் வன்கொடுமை, எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் விக்ரமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.