பெங்களூருவில் பேருந்து பணிமனை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீயில் எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வீரபத்ரா நகரில் இன்று காலை நடந்த இந்த சம்பவத்தில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, அந்த தீ அங்கிருந்த பேருந்துகள் மீது பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் என்னவென்று சரியாக கண்டறியப்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
சம்பவம் நடந்த இடம் திறந்தவெளி என்பதால், அங்கிருந்தவர்கள் உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால், நல்லவேளையாக எந்தவொரு உயிர்ச் சேதமோ, காயமோ ஏற்படவில்லை. அதேசமயம், சுமார் 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீயில் கருகியதாகக் கூறப்படுகிறது.
#BreakingNews
Massive fire near a garage in Bengaluru, fire-fighting teams on spot #Bengaluru #BengaluruFire #accident pic.twitter.com/YGG7FCak7F— Suchitra Das (@Suchitra_Dass) October 30, 2023
இந்த சம்பவம் குறித்து பேசிய தீயணைப்புத் துறையின் மூத்த அதிகாரியொருவர், தங்களின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த தீ விபத்து தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அந்த வீடியோக்களில், பேருந்துகளில் தீ கொழுந்துவிட்டு எரிய, அந்த இடமே கருப்பு புகை மண்டலமாக மாறிவிட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.