சென்னை: மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்து உள்ளது. தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த 23ந்தி அன்று மாலத்தீவு அருகே உள்ள பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மாலத்தீவு கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். தங்களது கடற்எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, 12 பேரையும் மாலத்தீவு கடற்படையினா் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, கடற்படையினா் அளித்த தகவலின்பேரில், மீனவா்கள் […]
