தமிழகத்துக்கு, நாளை முதல் 23 வரை, 2,600 கன அடி காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடலாம் என, காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 89வது ஆலோசனைக் கூட்டம், நேற்று புதுடில்லியில் நடைபெற்றது.
இந்த குழுவின் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய நீரின் அளவு குறித்து, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
துவக்கத்திலேயே இதற்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்தது. ‘அணைகளில் கையிருப்பு இல்லை; மழை பொழிவும் இல்லை; தமிழகத்துக்கு நீர் திறந்துவிடுவது இயலாத காரியம்’ என அம்மாநில அதிகாரிகள் கூறினர்.
ஆனாலும், மழை பொழிவு, அணைகளில் கையிருப்பு, நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றஉத்தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட நீர் பங்கீட்டு விபரங்கள் உள்ளிட்ட தரவுகளை, ஒழுங்காற்றுக்குழு ஆய்வு செய்தது.
இறுதியாக, ‘இரு மாநில எல்லையான பில்லிகுண்டுலு அருகே, நாளை முதல் 23 வரை, 2,600 கன அடி காவிரி நீரை, தமிழகத்துக்கு கர்நாடகாதிறந்து விடலாம்’ என, பரிந்துரை செய்வதாக வினித் குப்தா அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகா, இந்த பரிந்துரையை ஏற்க முடியாதென கூறிவிட்டது. இருப்பினும், ஓரிரு நாட்களில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடி, ஒழுங்காற்றுக்குழு அளித்த பரிந்துரையை பரிசீலித்து, முறையான உத்தரவை பிறப்பிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
– நமது டில்லி நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement