34 ஆவது மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா – 2023

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவின் சுவட்டு மைதான நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது.

இதனை மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி கலாராணி ஜேசுதாசன் அவர்களின் வழிகாட்டலில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி (மாவட்ட செயலாளர்) திருமதி நிசாந்தி அருள்மொழி மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மாணிக்கப்போடி சசிகுமார் அவர்களின் நெறிப்படுத்தல் மூலம் நடைபெறுகிறது.

இதில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் இளைஞர் சேவை அதிகாரி த.சபியதாஸ் விளையாட்டு பயிற்சியாளர்கள் செல்வன் பிறைசூடி வதீஸ்க்குமார், தே.அருள்நாதன், லக்ஸ்மிசுந்தரம் அகிலரூபன் ஆகியோர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர், யுவதிகளை நெறிப்படுத்தியுள்ளனர்.

அந்த வகையில் 14 பிரதேச செயலக பிரிவிலிருந்தும் அதிகளவான இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட நிகழ்வில் இம்முறையும் ஒட்டுமொத்த மெய்வல்லுனர் சம்பியாக மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 33 முதலாமிடங்களையும், 03 இரண்டாமிடங்களையும், 03 மூன்றாமிடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதில் களுதாவளை ஜோர்டன் இளைஞர் கழகம் 21 முதலாமிடங்களையும், 02 இரண்டாமிடங்களையும், 02 மூன்றாமிடங்களையும் பெற்றதுடன் செட்டிபாளையம் பாடசாலை இளைஞர் கழகம் 12 முதலாமிடங்களையும்

களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுல இளைஞர் கழகம் 01 இரண்டாமிடத்தினையும் 01 மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், 20 வயதிற்குட்பட்ட பெண்கள் அணியினர் 4 X100M , 4 X400M செட்டிபாளையம் மற்றும் களுதவளை பெண்வீராங்கனைகள் இணைந்து ஓடி வெற்றி வாகை சூடியுள்ளனர்.

மிகமுக்கியமாக உயரம் பாய்தல் நான்கு போட்டி நிகழ்வுகளிலும் மற்றும் 4 அஞ்சல் போட்டிகளிலும் களுதவளை வீரர்கள் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.