திருவனந்தபுரம்: பிரபல கேரள நடிகை ரென்ஜூசா 34 தனது வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் ரென்ஜூசா, இவர் மலையாள டி.வி. சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற நிலையில் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று திருவனந்தபுரம் அடுத்த காரியாம் என்ற பகுதியில் வீட்டில் இறந்து கிடந்தார்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரென்ஜூசா டி.வி. சீரியல் ஒன்றை சொந்தமாக தயாரித்ததில் ஏற்பட்ட நஷ்டத்தில் கடன் பெருகியதாகவும், கடந்த சில மாதங்களாக நிதி நெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவந்தது. இறந்த நடிகை ரென்ஜூசாவிற்கு திருமணமாகி, கணவர் உள்ளார்.நடிகை இறப்பு குறித்து கணவர், அவரது தாய், தந்தையரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement