ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போலீஸ் அதிகாரி மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஈத்கா அருகே உள்ள மைதானத்தில் அப்பகுதியைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் மசூரர் வாணி என்பவர், உள்ளூர் மக்களுடன் இணைந்து நேற்று கிரிக்கெட் விளையாடினார். அப்போது, திடீரென துப்பாக்கி குண்டு அவர் மீது பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, மசூரர் வாணியை பரிசோதித்த டாக்டர்கள், அபாய நிலையிலேயே அவர் உள்ளதாகவும், அதற்கேற்ப அவருக்கு சிகிச்சைகள் அளிப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கிடையே, சம்பவம் நிகழ்ந்த பகுதியை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது பயங்கரவாதிகளாக இருக்கக்கூடும் எனவும் சந்தேகிக்கின்றனர்.
இத்தாக்குதலுக்கு, போலீசாரின் கைத்துப்பாக்கியையே குற்றவாளிகள் பயன்படுத்தி இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement