டாக்கா : நம் அண்டை நாடான வங்கதேசத்தில், வரும் ஜனவரியில் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை நியாயமாக நடத்தும் வகையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலக வலியுறுத்தி, முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி சார்பில் டாக்காவின் புறநகரில் நேற்று முன்தினம் பேரணி நடத்தப்பட்டது.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆவாமி லீக் சார்பிலும் அதே நேரத்தில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிகளின்போது, பல்வேறு இடங்களில் இரு கட்சித் தொண்டர்களும் மோதிக் கொண்டனர். இதில், ஒரு போலீஸ்காரர் மற்றும் வங்கதேச தேசியவாத கட்சி தொண்டர் உட்பட இருவர் உயிரிழந்தனர்; போலீசார் உட்பட 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வன்முறையைத் துாண்டியதாக, வங்கதேச தேசியவாத கட்சியின் பொதுச்செயலர் மிர்சா பக்ருஸ் இஸ்லாம் ஆலம்கிர், நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்றும் டாக்கா உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தன. போராட்டக்காரர்கள், ஒரு பஸ்சுக்கு தீவைத்தனர். இதில், பஸ்சுக்குள் துாங்கிக் கொண்டிருந்த, டிரைவரின் உதவியாளர் உயிரிழந்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement