பெங்களூரு, பெங்களூரில், ‘காரேஜ்’ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், பழுது பார்க்க நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் தீயில் எரிந்துநாசமாகின.
கர்நாடகா தலைநகர் பெங்களூரு வீரபத்ரா நகரில், ‘சீனிவாஸ் கோச் ஒர்க்ஸ்’ நடத்தி வருபவர் சீனிவாஸ். கடந்த 15 ஆண்டுகளாக இங்கு பஸ்களை பழுது பார்த்து வருகிறார்; 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு, 20க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று காலை 11:30 மணிக்கு, ‘ஸ்லீப்பர் பஸ்’ ஒன்றில், ‘வெல்டிங்’ வைக்கும் பணி நடந்தது. அப்போது, அதில் இருந்து பரவிய தீப்பொறி, பஸ் சீட் மீது விழுந்தது.
இதை ஊழியர்கள்கவனிக்காததால், பஸ்சில் தீ பற்றி மளமளவென பரவியது. ஊழியர்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால், போக்குவரத்து நெரிசலில் தீயணைப்பு வாகனம் சிக்கி சம்பவ இடத்துக்கு வருவதற்குள், 10க்கும் மேற்பட்ட பஸ்கள் தீயில் எரிந்து நாசமாகின.
பல மணி நேரம் போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம்ஏற்படவில்லை.
சம்பவ இடத்தை துணை முதல்வர் சிவகுமார் ஆய்வு செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement