2nd person who received a pig heart transplant also died | பன்றி இதயம் பொருத்தப்பட்ட 2வது நபரும் உயிரிழப்பு

மேரிலாந்து ;அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட இரண்டாவது நபர், 40 நாட்கள் உயிர் வாழ்ந்த நிலையில் திடீரென இறந்துள்ளார்.

அமெரிக்காவின் மேரிலாண்ட் மருத்துவமனையின் டாக்டர்கள் குழு, கடந்த செப்., 20-ல் இதயம் செயலிழந்த அந்நாட்டின் முன்னாள் கடற்படை வீரரான லாரன்ஸ் பேசட், 58, என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை வெற்றிகரமாகப் பொருத்தியது.

அறுவைச் சிகிச்சை முடிந்த நிலையில் தன் அன்றாடப் பணிகளை லாரன்ஸ் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏற்கனவே, கடந்த 2022ம் ஆண்டு ஜன., 7ல் இதே மருத்துவமனை டேவிட் பெனட் என்பவருக்கு முதன்முறையாக பன்றியின் இதயத்தை பொருத்தி சாதனை படைத்தது. எனினும், இரண்டு மாதங்களில் அவர் உயிரிழந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.