Mercedes Benz GLE – ₹ 1.15 கோடியில் மெர்சிடிஸ்-பென்ஸ் GLE எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2023 மெர்சிடிஸ்-பென்ஸ் GLE LWB எஸ்யூவி மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனுடன் ரூ.96.40 லட்சம் முதல் ரூ.1.15 கோடி வரையிலான விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

GLE 300d 4MATIC, GLE 450 4MATIC மற்றும்  GLE 450d 4MATIC என மூன்று வேரியண்டில் டாப் வேரியண்ட் மட்டும் 2024 ஆம் ஆண்டு முதல் டெலிவரி வழங்கப்பட உள்ளது.

Mercedes-Benz GLE LWB

மூன்று என்ஜினை பெறுகின்ற மெர்சிடிஸ் ஜிஎல்இ இரண்டு டீசல் மற்றும் ஒரு பெட்ரோல் என்ஜினை பெற்றுள்ளது. ஆரம்ப நிலை GLE 300d 4MATIC வேரியண்டில் உள்ள 2.0 லிட்டர் டீசல் என்ஜின் நான்கு சிலிண்டர் கொண்டு அதிகபட்சமாக 269hp பவர் மற்றும் 550Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த வேரியண்ட் 6.9 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டுகின்றது.

அடுத்து, GLE 450d 4MATIC ஆறு-சிலிண்டர் பெற்ற 3.0 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 367hp பவர் மற்றும் 750Nm டார்க் வழங்குகின்றது.  இந்த மாடல் 5.6 வினாடிகளில் 0-100kph வேகத்தை அடைகிறது.

GLE 450 4MATIC வேரியண்ட் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பவர் 381hp மற்றும் 500Nm டார்க் கொண்டுள்ளது. 5.6 வினாடிகளில் 0-100kph வேகத்தை அடைகிறது.

அனைத்து மூன்று என்ஜினிலும் பொதுவாக, மெர்சிடிஸ் 4MATIC ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் மூலம் நான்கு சக்கரங்களுக்கும் பவர் வழங்கி 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டு மைல்ட் ஹைப்ரிட் 48V இன்டகிரேட்டட் ஸ்டார்டர்-ஜெனரேட்டரை (ISG) கொண்டுள்ளன, மேலும் கூடுதலாக 20hp மற்றும் 200Nm வழங்குகின்றது.

முந்தைய மாடலை விட புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட் மற்றும் கிரில் அமைப்பினை கொண்டுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி மாடலின் இன்டிரியரில் மேம்பட்ட டூயல் டோன் கேபின் கொடுக்கப்பட்டு MBUX கனெக்ட்டிவிட்டி அம்சத்தை பெறுகின்றது.

Mercedes-Benz GLE Facelift Price (ex-showroom, India)
GLE 300 d 4Matic Rs. 96.40 Lakh
GLE 450 4Matic Rs. 1.1 Crore
GLE 450 d 4Matic Rs. 1.15 Crore

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.