வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கேரள கவர்னருக்கு எதிராக அம்மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு கவர்னருக்கு எதிரான மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அதே பாணியில் கேரள அரசும் கவர்னர் மீதான எதிர்ப்பு நிலையை வெளிப்படுத்தி உள்ளது .
கேரள அரசு தரப்பில் தலைமை செயலர் மற்றும் எம்எல்ஏ., ராமகிருஷ்ணன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்; பல முக்கிய கோப்புகள் கவர்னர் மாளிகையில் தேக்க நிலையில் உள்ளது. உரிய காலத்தில் கவர்னர் அனுமதி அளிப்பது சட்ட அம்சமாகும். ஆனால் கவர்னர் ஆரிப் முகம்மதுகான் காலம் தாழ்த்தி வருகிறார்.
கேரள பல்கலை., சட்ட திருத்த மசோதா, கூட்டுறவுசங்க திருத்த மசோதா, லோக்அயுக்தா திருத்த மசோதா, பொது சுகாதார சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட பல கோப்புகள் அனுமதி அளிக்கப்படாமல் உள்ளது. இவை யாவும் 2020 முதல் 2023 வரை சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. என்றும் மனுவில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.
அரசு அனுப்பிய பல கோப்புகள் தொடர்பாக மாநில முதல்வரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்று கவர்னர் மாளிகை தரப்பில் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement