சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 1.44 லட்சமாக உள்ளது. இதில் இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 55,295 ஆக உள்ளது.
இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், மின்சாதன பழுதுகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகள் தாமதமாகின்றன.
இதுகுறித்து, மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது: மின்வாரியங்களில் ஓய்வுபெறும் ஊழியர்களின் பணியிடங்கள் மீண்டும் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், ஆண்டுதோறும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், இருக்கும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.சில பணியிடங்கள் மட்டும் ஒப்பந்த ஊழியர்களை கொண்டுபணிகள் மேற்கொள்ளப்படு கின்றன.
காலிப் பணியிடங்களில் பணியாளர்களை நியமிக்கக்கோரி மின்வாரிய நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கைவிடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு ஊழியர்கள் கூறினர்.