
'லியோ' வெற்றி விழா : சைலன்ட் ஆன அனிருத்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த, ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 'லியோ' படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பலரும் பேசினார்கள். ஆனால், விழாவுக்கு இசையமைப்பாளர் அனிருத் வராமல் போனது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அவர் வெளியூரில் இருக்கிறார், அதனால் தான் வரவில்லை என்று சொல்கிறார்கள்.
அப்படியே வெளியூரில் இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஒரு வாழ்த்து செய்தியையாவது அனிருத் பதிவிட்டிருக்கலாம். அடுத்து ரஜினி நடிக்க, லோகேஷ் இயக்க உள்ள படத்திற்கும் அனிருத் தான் இசை. அதனால், லோகேஷுக்கும் அனிருத்துக்கும் இடையில் சண்டை என சர்ச்சை எழவும் வாய்ப்பில்லை.
இருப்பினும் அனிருத் 'சைலன்ட்' மோடில் போனதற்கு என்ன காரணம் ?.