தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டதால், பிளிப்கார்ட் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்பனை களைகட்டுகிறது. நவம்பர் 2 ஆம் தேதி முதல் இந்த விற்பனை தொடங்கியிருக்கும் நிலையில், பல்வேறு முன்னணி பிராண்ட் மொபைல்களுக்கு அதிரடி ஆஃபர்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை கேட்டிராத தள்ளுபடிகளும் சலுகைகளும் மொபைல்களுக்கு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை வாடிக்கையாளராகிய நீங்கள் உங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல மொபைல்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் உங்களுக்கான தள்ளுபடி விலை மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸை தெரிந்து கொண்டு அதற்கேற்ப இந்த ஆஃபரில் மொபைல்களை தட்டி தூக்குங்கள்.
பெரும்பாலானோர் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் மொபைலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் குவாலிட்டி கேமரா உள்ளிட்ட அனைத்து அம்சங்களும், அதாவது ஃப்யூச்சர் மொபைல்களில் இருப்பது போன்ற அம்சங்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலான மாடல்களும் மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் ரூபாய் பட்ஜெட் வாடிக்கையாளராக இருந்தால் விரைவில் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டுக்கு வர இருக்கும் POCO C65 வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.
POCO சந்தையில் அதன் மிகவும் மலிவு விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நிறுவனம் புதிய சி-சீரிஸ் போனை கொண்டு வருகிறது. அதற்கு POCO C65 என்று பெயரிடப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் + 128ஜிபி மாடலின் விலை அமெரிக்க டாலர் 109 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை 129 அமெரிக்க டாலர்களாகவும் இருக்கும். இவை ஆரம்ப விலைகள் மட்டுமே, விற்பனைக்கு வரும்போது விலைகளில் மாற்றம் இருக்கலாம்.
POCO-ன் வரவிருக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போனான POCO C65, நவம்பர் 5, 2023 அன்று ஆன்லைனில் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போன் ஆனது MediaTek Helio G85 SoC மூலம் இயக்கப்படும் மற்றும் 50 மெகாபிக்சல் AI டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். POCO C65 ஏற்கனவே NBTC, TDRA, IMDA மற்றும் FCC உட்பட பல சான்றிதழ் தளங்களில் காணப்பட்டது. இது Redmi 13C இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.