சென்னை: சென்னை மாநகராட்சி மாதாந்திரமாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடந்த கூட்டத்தில் துணைமேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேள்வி நேரத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசினர்.
அதைத் தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் பேசியதாவது:
சென்னை மாநகராட்சியில் 2019-20 நிதியாண்டில் 662 கட்டிடங்களில் 3,064 கிலோவாட் பீக் திறன் உள்ள ரூப் டாப் சோலார் பவர் பிளான்ட் அமைக்கப்பட்டது. இதற்கு மத்தியஅரசு வழங்க வேண்டிய ரூ.4.97 கோடி மானியத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில், 3,000 செல்போன் கோபுரங்களுக்கான சொத்துவரி ரூ.125 கோடி நீதிமன்ற வழக்கு காரணமாகவசூலிக்கப்படாமல் உள்ளது. அவற்றை விரைந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நூலக வரி: நூலக வரி ரூ.239 கோடி மாவட்ட நூலக ஆணைக்குழுவுக்கு செலுத்தப்படாததால், மாநகராட்சி பள்ளிகளில் புதிய நூலகத்தை உருவாக்கமுடியாமல் உள்ளது. கடந்த 2007-08நிதியாண்டு முதல் கடந்த நிதியாண்டு வரை மாநகராட்சிக்கு வந்தரூ.300 கோடி மதிப்புள்ள காசோலைகள் வங்கிகளில் செலுத்தி, வரவு வைக்கப்படவில்லை. இதனை ஆய்வு செய்து, இனிமேல் இதுபோல் நடைபெறாமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், புவிசார் வரைபடம் மூலமாக 3.11 லட்சம் கட்டிடங்களில் சொத்துவரி குறைவாக இருப்பதாக தெரிய வந்தும், இதுவரை முழுமையாக சொத்துவரி வசூலிக்கப்படவில்லை. கோடம்பாக்கம் 137-வது வார்டு ஆற்காடு சாலையில், வன்னியர் தெருவில், அரசுக்கு சொந்தமான 23,680 சதுரஅடி நிலத்தை தனியாரிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் பேசியதாவது: உமா ஆனந்தன் (பாஜக): மாநகராட்சியின் நிதித்துறை மர்மமாகவேஉள்ளது. அவற்றை வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட உத்தரவிடவேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டம்,சென்னை நதிகள் சீரமைப்பு திட்டம்போன்றவற்றில், கவுன்சிலர்களை யும் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.
பிரியதர்ஷினி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): சென்னையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதுடன், மருத்துவர்களும் பணியில் இருப்பதில்லை. மாநகராட்சி பள்ளிகளில் போதையால் மாணவர்கள் அடிமையாவது அதிகரித்து வருகிறது. அதனால், மண்டலத்துக்கு ஒரு போதை மறுவாழ்வு மையங் களை உருவாக்க வேண்டும்.
இதேபோன்று பல்வேறு கட்சி களின் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.
அதைத்தொடர்ந்து, மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை மற்றும் குறைகள் குறித்து பரிசீலித்துஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி மேயர், துணை மேயர், ஆணையர் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
தீர்மானங்கள் நிறைவேற்றம்: சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் சமுதாய நலக்கூடங்கள், கலையரங்கங்களுக்கு இனி, ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் இயங்கும் நிறுவனங்களின் முதலீட்டு தொகையின் அடிப்படையில் வசூலிக்கப்படும் நிறும வரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் கட்டுமானப் பணிகளுக்கான உரிமம் மற்றும் இடிப்பதற்கான உரிமம் பதிவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கொசு ஒழிப்பு பணிகளுக்காக, வாகனத்தில் பொருத்தப்பட்டு இயக்கக் கூடிய பெரிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் 30, கையினால் எடுத்து செல்லக்கூடிய 100 சிறிய வகை புகைப்பரப்பும் இயந்திரங்கள் ஆகியவை ரூ.2.53 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்படவுள்ளது.
மணலி மண்டலம், 16-வது வார்டு, மணலி இணைப்பு சாலையில் இருந்து பர்மா நகர் இணைப்புசாலை வரை சாலை அமைக்கும் பணியை, ஒப்பந்ததாரர் மகாதேவன்மேற்கொண்டார். அதில் குறைபாடு கள் கண்டறியப்பட்டதால், ஒப்பந் ததாரரை கருப்பு பட்டியலில் சேர்க்க அனுமதிக்கப்படும்.
சென்னை பெரம்பூர் பள்ளி சாலையில் உள்ள, சென்னை தெலுங்கு தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை விகிதம்குறைவாக உள்ளதால், அப்பள்ளியை, எம்.எச்.சாலையிலுள்ள, நடுநிலைப் பள்ளியுடன் இணைக்கஅனுமதி என்பன உள்ளிட்ட 54 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.