2022/23 பெரும் போகத்தின் போது விவசாயக் காப்புறுதி நட்டயீட்டை வழங்குவதை நோக்கில் வறட்சி, வெள்ளம் மற்றும் காட்டுயானைகளின் பாதிப்பு போன்றவற்றிற்காக 24 நபர்களுக்கு ரூபா 17,82,360 வை நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் புத்தளம் மாவட்ட சுற்றுப் பயணத்தின் போது இடம்பெற்றது.
2022/23 பெரும் போகத்தின் விவசாயப் பாதிப்புக்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக 304 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 375.5 ஏக்கர்களுக்காக 62, 59,986 ரூபா நிதி அரசாங்கத்தினால் விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
2023 சிறு போகத்தின் போது 1723 விவசாயிகளின் 2335 ஏக்கர்கள் பரப்பு 1பேச்சர்ஸ் :34க்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அவ்வாறே விவசாய கமத்தொழில் காப்புறுதிச் சபையினால் பழமை வாய்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் 7646 விவசாயிகள் தகுதி பெற்று தற்போது ஓய்வூதியச் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் சமகால விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தினால் அறுவடையை அதிகரிக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பரசூட் தட்டுக்கள் வழங்கப்பட்டன. அதற்கிணங்க ஆணமடுவ, புத்தளம், புத்/தப்போ, தாழ் புளியங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இப்பரசூட் தட்டுக்கள் வழங்கப்பட்டன.
இதன்போது அமைச்சர் மஹிந்த அமரவீர நுரைச்சோலை மாதுளை உற்பத்தித் திட்டத்தின் முன்னேற்றத்தை மேற்பார்வை செய்யும் சுற்றுப் பயணத்திலும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கால்நடை வள இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத், இணைப்புக் குழுத் தலைவர் சிந்தக அமல் மாயாதுன்ன, விவசாய அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகள், விவசாயிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.