வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 2023 நிதியாண்டில் எச்.சி.எல்., நிறுவனத்தின் ஷிவ் நாடார் 2042 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். அந்த வகையில், அவர் தினமும் ரூ.5.6 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஹூருண் நிறுவனத்தின் 2023ம் ஆண்டுக்கான ஈடெல்கிவ் ஹூருன் இந்தியா பிலான்தெரப்பி நன்கொடையாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. சமுதாய மேம்பாட்டுப்பணிக்காக நன்கொடை வழங்குபவர்களின் பட்டியலை இந்த நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
இந்த நிதியாண்டிற்கான பட்டியலில், இந்தியாவை சேர்ந்த 119 தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 8445 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.
எச்.சி.எல்., நிறுவனர் ஷிவ் நாடார் அதிகபட்சமாக, கடந்த நிதியாண்டில் 2042 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளார். அதாவது, தினமும் 5.6 கோடி ரூபாயை, கல்வி, கலை, கலாசாரப் பணிகளுக்காக நன்கொடையாக கொடுத்துள்ளார்.
அடுத்த இடத்தில் அஸீம் பிரேம்ஜி, நந்தன் நிலகேனி, ரோஹிணி நிலகேனி, நிதின் மற்றும் நிகில் காமத், சுப்ரதோ பாக்சி, சுஷ்மிதா, ஏ.எம்.நாயக் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் இருக்கும் விப்ரோ நிறுவனர் அஸீம் பிரேம்ஜி, 1774 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
‘டாப்’ நன்கொடையாளர் பட்டியலில் 7 பெண்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்களில் ஒருவரான ரோஹினி நிலகேனி, 170 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement