Indian 2: `Come Back Indian' 1996 டு 2023 – லஞ்சத்தை ஒழிக்க மீண்டும் வருகிறார் இந்தியன் தாத்தா!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் `இந்தியன் 2′ படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

‘இந்தியன்’ படத்தின் வரவேற்பிற்குப் பிறகு, கமலின், ‘வீரசேகரன் சேனாபதி’ எனும் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தயாரிப்பு சிக்கலுக்குப் பிறகு லைகா சுபாஸ்கரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் தற்போது ‘இந்தியன் 2’ மட்டுமல்ல ‘இந்தியன் 3’-ம் ரெடியாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று ‘இந்தியன் 2’ படத்தின் இன்ட்ரோ வீடியோ வெளியாகியுள்ளது. ‘இந்தியன்’ முதல் பாகத்திற்கு ரஹ்மான் இசையமைத்து எல்லாப் பாடல்களும் மாபெரும் ஹிட்டாக அமைந்தது. இப்படத்திற்குத் தற்போது தமிழ் சினிமாவில் கலக்கி வரும் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த இன்ட்ரோ வீடியோவிற்கு ‘Come Back Indian’ என்ற பாடலோடு, ஊழல்களைத் தட்டிக் கேட்க ‘வீரசேகரன் சேனாதிபதி’ நேதாஜி படத்துடன் அறிமுகமாகும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கிவிட்டது. இப்படத்தின் கூடுதல் சிறப்பாக, மறைந்த சினிமா கலைஞர்களான விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதுதான் அவர்கள் மூவரின் கடைசி படம்.

‘இந்தியன் 2’ படத்தில் சித்தார்த்

இதுதவிர, இந்தியாவில் பிரபலமாகப் பேசப்பட்ட பல ஊழல்கள், ஆதார், கொரோனாவை விரட்டப் பாத்திரத்தைத் தட்டியது எனச் சமகாலத்திற்கு ஏற்ப பல அரசியல் நையாண்டிகள் இந்த இன்ட்ரோ வீடியோவில் குறியீடாக இடம் பெற்றுள்ளன. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கிறது. இந்த ‘இந்தியன்’ தாத்தா என்னென்ன அரசியல் பேசி யாருக்கெல்லாம் பாடம் எடுக்கப் போகிறார், ஏ.ஆர்.ரஹ்மானின் மாஸ்டர் பீஸ் இசைக்கு ஈடுகொடுத்து அனிருத் ராக் ஸ்டாராகத் தன்னை நிரூபிப்பாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.