வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
படாவுன்: உ.பி.யில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் அம்மாநில கவர்னர் ஆனந்திபென்பட்டேல் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய வருவாய் கோட்டாட்சியர் (உட்கோட்ட நடுவர் )மாஜிஸ்திரேட் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உத்திரபிரதேச மாநிலம் படாவுன் மாவட்டம் லோதா பெஹாரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்திரஹாஸ் என்பவர் தனது விவசாய நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை வருவாய் கோட்டாட்சியர் வினீத் குமார் விசாரித்தார்.
இந்த வழக்கில் எதிர்மனுதாரராக மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேலையும் சேர்த்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். இது தொடர்பாக கவர்னரின் சிறப்பு செயலாளர் தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவே. மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட தலைமை நீதிபதி வாயிலாக கடிதம் அனுப்பப்பட்டது.
அரசியலமைப்பு சாசனப்படி கவர்னருக்கு நோட்டீசோ, சம்மனோ அனுப்ப முடியாது என்பது தெரியாததால் தவறுதலாக அனுப்பியதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் வினீத் குமாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். கவர்னருக்கு வருவாய் கோட்டாட்சியர் சம்மன் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement