லக்னோ: நெதர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 180 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லக்னோவில் நடக்கும் லீக் போட்டியில் நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
நெதர்லாந்து அணிக்கு வெஸ்லே (1) ஏமாற்றினார். தவுத், ஆக்கர்மான் இணைந்து பொறுப்புடன் விளையாடினர். 2வது விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்தபோது, தவுத் (42) ரன் அவுட்டானார். ஆக்கர்மான் 29 ரன்னில் திரும்பினார். கேப்டன் ஸ்காட் டக் அவுட்டானார். நபி ‘சுழலில்’ லீடு (3), வான் பீக் (2) ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற, நெதர்லாந்து அணி 46.3 ஓவரில் 179 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆப்கானிஸ்தான் சார்பில் நபி 3 விக்கெட் கைப்பற்றினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement