வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்ற 97 ஆயிரம் இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் பெரும்பாலானோர் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
அமெரிக்க கஸ்டம்ஸ் மற்றும் எல்லை பாதுகாப்புத் துறையின் தரவுகளின்படி 2022 அக்டோபர் முதல் 2023 செப்., வரை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற 96,917 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 2019- 2020ம் ஆண்டுகளில் பிடிபட்டவர்களின் எண்ணிக்கையை விட, இது 5 மடங்கு அதிகம் ஆகும்.
கைது செய்யப்பட்டவர்களை 4 பிரிவுகளின் கீழ் அமெரிக்க அரசு வகைப்படுத்தி உள்ளது. துணையில்லாத குழந்தைகள், குடும்பங்களோடு வரும் குழந்தைகள், குடும்பத்தோடு வருபவர்கள், வயது வந்த தனி நபர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில், தனிநபர்களே அதிகளவில் வருகின்றனர்.
அமெரிக்க சுங்க எல்லைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கைதானவர்களில் பெரும்பாலானோர் குஜராத் மற்றும் பஞ்சாபை சேர்ந்தவர்கள். சுமார் 30 ஆயிரம் பேர் கனடா எல்லையிலும், 41 ஆயிரம் பேர் மெக்சிகோ எல்லையிலும், மற்றவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்த பிறகு கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement