RE Himalayan 411 Discontinued – விடைபெறும் ஹிமாலயன் 411.., ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 விற்பனையில் கிடைக்கும்

ராயல் என்ஃபீல்டின் புதிய ஹிமாலயன் 450 வருகையை தொடர்ந்து ஹிமாலயன் 411 நீக்கப்படுவது உறுதியாகியுள்ளது. ஆனால், குறைந்த விலையில் தொடர்ந்து ஸ்கிராம் 411 மட்டும் விற்பனையில் கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

செர்பா 450 என்ஜினை பெறுகின்ற முதல் அட்வென்ச்சர் டூரிங் ரக ஹிமாலயன் 450 பைக்கில் 452cc லிக்யூடு கூல்டு என்ஜினை பெற்று அதிகபட்சமாக 40 hp பவர் மற்றும் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

Royal Enfield Himalayan

விற்பனையில் உள்ள ஸ்கிராம் 411 மற்றும் ஹிமாலயன் 411 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள LS 411 ஏர் ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6,500 rpm -யில் 24.3 hp பவர், 4,000-4,500 rpm -யில் அதிகபட்சமாக டார்க் 32 Nm வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டிருக்கின்றது.

2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹிமாலயன் 411 பல்வேறு தொழில்நுட்ப பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், உடனடியாக அதனை சரிசெய்து மேம்படுத்தி வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற பட்ஜெட் விலை அட்வென்ச்சராக உள்ளது.

scram 411

முன்புறம் வீல் 19 அங்குலமாக (21 இன்ச் ஹிமாலயன்) குறைக்கப்பட்டு, ஹெட்லைட்டில் சிறிய மாற்றம் உட்பட மேலும் பெட்ரோல் டேங்க் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பேணல், இருக்கையில் சிறிய மாற்றம் மற்றும் பக்கவாட்டு பேனல்,  ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 மாடலுக்கு கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மிமீ மட்டுமே எனவே சற்று நெடுந்தொலைவு நகர்ப்புற பயன்பாட்டிற்கு மற்றும் லேசான ஆஃப் ரோடு அனுபவத்துக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

புதிய ஹிமாலயன் 450 பைக் முழுமையான ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக அமைந்திருக்கும் எனபதனால் ஹிமாலயன் 411 நீக்கப்படுகின்றது.

royal enfield himalayan bike

 

புதிய ஹிமாலயன் பைக்கின் அறிமுகம் நவம்பர் 7 ஆம் தேதி EICMA 2023  மோட்டார் ஷோவில் வெளியிடப்படலாம். ஆனால் விலை ராயல் என்ஃபீல்டு மோட்டோவெர்ஸ் 2023 (முன்பாக ரைடர் மேனியா) ஆனது நவம்பர் 23 ஆம் தேதி அறிவிக்கப்படலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.