சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை லோகேஷ் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக யார் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
