வாரணாசி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், பனாரஸ் ஹிந்து பல்கலை மாணவியின் உடையை அவிழ்த்து சில்மிஷம் செய்த மூவர் கும்பல், அதை ‘வீடியோ’வாக பதிவு செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டது. அக்கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
உ.பி.,யில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலையில் படித்து வரும் மாணவி ஒருவர், நேற்று முன்தினம் இரவு தன் தோழியுடன் ஒரு கோவில் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அடங்கிய கும்பல், மாணவியை தோழியிடம் இருந்து பிரித்து தனியாக அழைத்து சென்றது.
பல்கலை விடுதி அருகே அந்த மாணவியின் உடையை களைந்த அந்த கும்பல், அவரிடம் பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டது.
மேலும் அந்த காட்சியை வீடியோவாகவும் பதிவு செய்தது. 15 நிமிடங்களுக்கு பின், அந்த மாணவியிடம் போன் நம்பரை பெற்றுக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement