வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெருசலேம்: இஸ்ரேல்- பாலஸ்தீன போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவை சந்தித்து பேசினார்.
கடந்த அக்.7-ம் தேதி துவங்கிய இஸ்ரேல்- பாலஸ்தீன போர் 27 நாட்களை எட்டியுள்ளது. இதுவரை 8 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாக கடந்த அக். 18-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஒரு நாள் பயணமாக இஸ்ரேல் வருகை தந்தார். இதையடுத்து இன்று (03 ம் தேதி) வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் வந்தார். அவரை டெல் அவிவ் விமான நிலையத்தில் தூதரக அதிகாரிகள் வரவேற்றார். பின்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவை சந்தித்து பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement