அமராவதி வலது கண் புரைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீடு திரும்பி உள்ளார். கடந்த மாதம் ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர் நீதிமன்றக் காவலில், ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சந்திரபாபு நாயுடுவுக்கு வலது கண்ணில் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஜாமீன் கோரி […]
