சென்னையில் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கை காரணமாக நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை ஹெல்மெட், சீட் பெல்ட், ஸ்டாப் லைன் வயலேஷன் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் அடுத்தகட்டமாக சென்னை சாலையில் செல்லும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இலகுரக மோட்டார் வாகனங்கள்: மணிக்கு 60 கிமீ கனரக மோட்டார் வாகனங்கள்: மணிக்கு 50 கிமீ இரு சக்கர வாகனங்கள்: மணிக்கு 50 கிமீ ஆட்டோ […]
