புதுடில்லி : ”மக்கள் என்ன நினைப்பரோ என்பதை அடிப்படையாக வைத்து நீதிமன்றங்கள் செயல்படுவதில்லை. அரசியல்அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டே செயல்படும். ”இதுதான், நீதிமன்றங்களுக்கும், சட்டத்தை இயற்றும் மன்றங்களும் இடையே உள்ள வித்தியாம்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் குறிப்பிட்டார்.
புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசியதாவது:ஒரு குறிப்பிட்ட சட்டம் அல்லது சட்டப் பிரிவு தொடர்பான வழக்கில் நீதிமன்றம் குறை கூறினால், அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் சட்ட மன்றங்கள் உரிய சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.
நீதிமன்றம் கூறியுள்ளது தவறு என்று போட்டிக்கு, அந்த தீர்ப்புக்கு எதிராக மற்றொரு சட்டத்தை கொண்டு வருவது சரியல்ல.நீதிமன்றங்களுக்கும், சட்ட மன்றங்களுக்கும் இடையே முக்கியமான சில வேறுபாடுகள் உள்ளன. நீதிமன்றங்களும், நீதிபதிகளும், அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டே செயல்படுகின்றன.மக்கள் என்ன நினைப்பரோ என்பதை பார்க்க முடியாது. ஆனால், சட்ட மன்றங்கள், மக்களின் எண்ணங்கள், விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement