வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த மற்றொரு லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை 33 ரன்னில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய மற்றொரு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
287 ரன் வெற்றி இலக்காகக்கொண்டு அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்களுக்கு அவுட் ஆனது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி 33 ரன்னில் வெற்றி பெற்றது.இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன்(50) பென் ஸ்டோக்ஸ்(64) மொயின் அலி(42) கிறிஸ் வோக்ஸ் (32) ஆகிய ஆட்டக்காரர்கள் தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க், ஹாசல்வுட், மற்றும் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement